நிலவு நிறமற்றதா?
நாம் இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும் இதற்க்கு பதில் வெண்மை என்றே கிடைக்கும். காரணம் நம் கண்களுக்கும் நிலவு வெண்மை நிறத்திலே தெரிகிறது. ஆனால் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் இதன் வண்ணம் பழுப்பு என்று விளக்குகிறார்கள்.
நிலவின் இருண்ட பகுதி ஊதா மற்றும் பழுப்பு நிறத்தையும் வெளிறிய பகுதி மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தையும் காட்டுகிறது. இந்த வண்ணங்களின் வேறுபாடுகள் இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற கனிமங்கள் உள்ளதால் உருவாகிறது. இனி நிலவு வெண்மை என்று சொல்லமுடியாது ஏனெனில் அங்கும் வண்ணங்கள் உள்ளது.
துரதிருஷ்டவசமாக நம் கண்களால் பூமியிலிருந்து இந்த சிறிய நிறங்களின் வேறுபாடுகளை காண முடியாது. இயற்கையாக நிலவில் சாம்பல் பரப்பு அதிகமாக உள்ளதால் நம்மால் நிலவை சாம்பல் வண்ணத்தில் பார்க்க முடிகிறது.
மேலும் சந்திரனைப் பற்றிய 10 உண்மைகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் : http://palsuvai.in/10-facts-about-the-moon/