ஏன் தெரியுமா?

கொட்டாவி விடும் போது காது கேட்பதில்லை ஏன் ?

நீங்கள் கொட்டாவி விடும்போது யாராவது எதையாவது சொன்னால் அது உங்கள் காதில் விழாது, அனேகமாக நீங்கள் இதை கவனித்திருக்க மாட்டிர்கள். சரி கொட்டாவி விடும்போது மற்றவர்கள் பேசினால் ஏன் காதில் விழுவதில்லை ? ஏன் என்று பாப்போம்.

நமக்கு கேட்கும் உணர்வு என்பது ஒலியலைகள் செவிப்பறையை அதிரச்செய்வதால் கேட்கும் உணர்வு உண்டாகிறது. செவிப்பறையின் இரு பக்கங்களிலும் அழுத்தம் சமமாக இருப்பதால் அதிர்வுகளை உணர முடிகிறது. நடு காதையும் தொண்டையையும் இணைக்கும் குழல் செவிப்பறையின் இரு பக்கங்களிலும் அழுத்தம் சமமாக இருக்க செய்கிறது.

நாம் கொட்டாவி விடுவதற்காக வாயை திறக்கும் போது மூடியிருக்கும் தொண்டை பகுதியின் திறப்பு திறந்து கொள்கிறது, இதனால் அதிக அளவில் காற்று உள்ளே சென்று செவிப்பறையின் இரு பக்கங்களிலும் உள்ள காற்றழுத்தத்தை சீர்குலைக்கிறது இதனால் செவிப்பறை அதிர்வுகளை உணர முடிவதில்லை. ஆகையால்தான் கொட்டாவி விடும்போது மற்றவர்கள் பேசினால் காதில் விழுவதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button