தெரிந்துகொள்வோம்
இன்சுலின் என்றால் என்ன ?
கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு மிக முக்கியமான ஹார்மோன்தான் இன்சுலின். இது உடலின் சக்தியின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இந்த சர்க்கரை இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். இதனால் கொடிய நோயான சர்க்கரை நோய் ஏற்படுகிறது.இந்த நோயினால் தற்போது பொரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் ஊசி போடப்படும். நாம் இன்சுலின் ஊசி போட்டு கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள குளுகோஸை மீண்டும் செல்களுக்குள் செலுத்துகிறது. இதனால் தற்சமயம் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இந்த இன்சுலின் என்ற அற்புதமான மருந்தை கண்டுபிடித்தவர் ‘பிரடரிக் கிராண்ட் பாண்டிங்’ என்பவர். (நவம்பர் 14, 1891 – பிப்ரவரி 21, 1941).