உடல் நலம்

இயற்கையான முக அழகை பெறவேண்டுமா ?

தற்போது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.சரும பராமரிப்பு அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். எளிய இயற்கையான முறையில் முக அழகை மேம்படுத்தலாம்.

  • தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
  • மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வருவதால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
  • கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இவ்வாறு செய்வதால் முகம் பொலிவு பெரும்.
  • கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக தோற்றமளிக்கும்.
  • தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகை பெரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button