மற்றவை

ஓட்டு மையில் அப்படி என்னதான் இருக்கிறது?

நாம் தேர்தலில் ஓட்டு போடும்போது நமது விரலில் ஊதா நிற மை வைப்பார்கள். இது நம் விரலைவிட்டு விரைவில் அழியாது என்பதை அனைவரும் அறிந்ததே. சரி ஏன் அழிவதில்லை அல்லது அழிக்கமுடிவதில்லை என்று பார்ப்போம்.

இந்த மையினை எம்.எல். கோயல் என்ற கர்நாடக ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்தது. தற்போது இது கள்ள ஓட்டினை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையில் சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கலந்துள்ளதால் இதனை விரலில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் பட்டு அதன் அடர்த்தி அதிகரிப்பதால், மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது.

இந்த காரணத்தினால் மையை விரலை விட்டு நீக்கமுடிவதில்லை. மேலும் இந்த மையானது இரண்டு வாரங்களுக்கு மேல் அழியாமல் இருக்கும். மை வைத்த இடத்தில் புதிய செல்கள் உருவாகும்போது பழைய செல்களோடு சேர்ந்து மையும் நீங்கிவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button