வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் சுற்றுசூழலை எவ்வாறு பாதிக்கிறது?
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல உயிரினங்களை பாதிப்படைய செய்கிறது. நாம் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களின் திரவம் தீர்ந்த பின் அதனை குப்பையிலோ அல்லது நீர் தேங்கும் இடத்திலோ போடுகிறோம்.
அந்த பொருட்களில் மீதம் இருக்கும் இரசாயன கலவைகள் நீரின் பாதையில் சென்று ஆறு, குளம், மற்றும் ஏரிகளில் கலக்கிறது. இந்த இரசாயன கலவை நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள பல சேர்மங்கள் மீன்களின் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும் வனவிலங்குகளின் இனபெருக்கம் தடைப்படும்.
நாம் சாதாரனமாக வீட்டில் சலவை செய்யும் போதோ அல்லது பாத்திரம் துலக்கும் போதோ வெளியேறும் சோப்பு கழிவுகள் நம் வீட்டு தாவரங்களுக்கு பாய்ச்சபடுகிறது. இது தாவரத்தின் வளர்ச்சியை பாதிப்பதோடு நிலத்தின் பல்லுயிரியலைக் குறைக்கும். குறிப்பாக உழவனின் நண்பனான மண்புழுக்களை அழித்துவிடும்.
- எனவே வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை வீதியில் எறிவதை நிறுத்திவிட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் சோப்பு நீரை தாவரங்களுக்கு பாய்ச்சுவதை தவிர்க்கவும்.
கேள்வி :உலக புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
பதில்: ஏப்ரல் 22
சூப்பர்