ஏன் தெரியுமா?

பாம்பு நாக்கின் ரகசியம் தெரியுமா ?

நாம் வாசனையை நுகர மூக்கினை பயன்படுத்துவது போல் பாம்புகள் வாசனையை அறிய தங்கள் முனை பிளவுபட்ட நாக்கினை பயன்படுத்துகிறது. பாம்புகளுக்கும் நாசி துளைகள் உண்டு ஆனால் இவை தங்கள் நாக்கினையே பெரிதும் பயன்படுத்துகிறது. இது இதற்க்கு மேலும் வாசனை உணரும் திறனை மேம்படுத்துகிறது.

பாம்புகள் அடிக்கடி நாக்கினை வெளியே நீட்டுவதை பார்த்திருப்போம். இப்படி செய்வதால் இவை காற்றில் உள்ள நுண்ணிய தூசி துகள்களை நாக்கின் மூலம் எடுத்துக்கொள்கிறது. இது வாய்க்குள் உள்ள வேமேரோநசல் (vomeronasal) என்னும் உறுப்பு இந்த தூசி துகள் மனிதனுடையதா அல்லது வேறு விலங்கினுடையதா என்று கண்டறிந்து பாம்பிற்கு உணர்த்துகிறது.

இதனைக்கொண்டுதான் பாம்புகள் தப்பிப்பதற்கோ அல்லது இறையை பிடிபதற்கோ பயன்படுத்துகிறது. எனவேதான் பாம்புகள் அடிக்கடி நாக்கினை வெளியே நீட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button