ஏன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வழுக்கை விழுகிறது?
இன்று பெரும்பாலான ஆண்கள் கவலைப்படுவது இளம் வயதில் வழுக்கை விழுவது பற்றிதான். முடி பராமரிப்பு விஷயத்தில் ஆண்கள் பெண்களைவிட குறைந்தவர்களா என்ன? சரி ஏன் வழுக்கை விழுகிறது என்று பார்க்கலாமா?.
தலையில் வழுக்கை ஆண்களுக்கு மட்டும் விழுவதில்லை பெண்களுக்கும் தான். ஆனால் அரிதாகவே வழுக்கை விழும். இதற்க்கு காரணம் என்னவென்றால் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) எனப்படும் ஹார்மோன்கள் ஆண்களிடத்தில் ஆதிகம் காணப்படும். எனவேதான் ஆண்களுக்கு அதிகமாக வழுக்கை விழுகிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் பெண்களிடத்தில் குறைவு எனவேதான் பெண்களுக்கு வழுக்கை எளிதில் விழாது.
அது சரி தற்போது இளம் வயதினருக்கு ஏன் வழுக்கை விழுகிறது. இதற்க்கு மரபணு காரணிகளின் காரணமாக இருந்தாலும் இன்றைய வாழ்கை நடைமுறை மற்றும் இயற்கையான உணவு முறை இல்லாத காரணத்தாலும் அதிகமானோர் அதிக முடி உதிர்வினை சந்திக்கிறார்கள்.