மற்றவை

அதென்ன வெண்ணெய்ப் பழம் ?

இதன் வண்ணமும் தோற்றமும் பார்பதற்க்கு காய்கறி போன்று தோற்றம் அளித்தாலும், உண்மையில் இது ஒரு பழ வகையாகும். இதன் பெயர் வெண்ணெய்ப் பழம் அல்லது ஆனைக்கொய்யா ஆகும்.

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மரம் ஆகும். இதில் நூற்றுகணக்கான வகைகள் உள்ளது.

வாழைப்பழங்களை விடவும் இதில் அதிக பொட்டாசியம் உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 20
வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் இதில் உள்ளது.

இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைகின்றது. மேலும் இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

5,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்கா, ஒல்மெக் மற்றும் மாயன் பழங்குடியினர் பயிரிட்டு உண்டு வந்தார்கள் என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகிறது.

இதனை வீட்டிலும் வளர்கலாம். இதன் விதை ஆறு வாரத்தில் தளிர் விட்டுவிடும். ஆனால் பழம் தர ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button