குளிர்சாதன பெட்டி பராமரிப்பு
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதால் மின்சார செலவு அதிகமாகிறது. அடிக்கடி திறந்து மூடுவதை குறைத்துக்கொண்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
ஐஸ்கட்டி வைக்கும் டிரேயை முதலில் வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தாலும் டிரேயில் இருந்து எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.
ஃப்ரிட்ஜ் திடீரென்று ஓசை எழுப்பினால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு சோப்பு நீரை உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் சோப்பு நாளடைவில் உட்சுவர்களை உடைத்துவிடும். இதற்குப்பதில் சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.
உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர்ந்த பின்தான் வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழத்தோலை வைக்கலாம்.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது ரீபைண்டு ஆயிலை தடவி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு நாட்களானாலும் பிரஷ்ஷாக இருக்கும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்துவிட்டால் நறுக்கும்போது கண் கலங்காது.
ஃப்ரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை சமைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே எடுத்து வைத்துவிட்டு சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
காய்கறிகளை நறுக்கி அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் வைட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.
முழு தேங்காயை ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்துவிட்டு உடைத்தால் டக்கென உடைந்துவிடும்.
ஃப்ரிட்ஜில் வைத்த அப்பளத்தை பொரித்தல் எண்ணெய் அதிகம் குடிக்காது.