தெரிந்துகொள்வோம்

பார்வையற்றவர்களுக்கு கனவு தோன்றுமா?

கனவு என்பது REM (Rapid Eye Movement) எனப்படும் துரிதமான கண்ணசைவு நேரங்களில் ஏற்படும். இந்த நேரங்களில் நாம் விழித்திருக்கும் நிலையைப் போலவே நமது மூளை இயங்குகிறது. ஆனால் மூளையின் எல்லாப் பகுதிகளும் இந்த நிலையில் இயங்குவதில்லை.

பிறவியில் பார்வை இல்லாதவர் மற்றும் குறைந்த வயதில் பார்வையை இழந்தவர்கள் ( 7 வயதிற்குள்) இவர்களுக்கு படங்கள் போன்று கனவு காண்பது சாத்தியமற்றது. ஆனால் குறைந்த பார்வை உள்ளவர்கள் நன்கு கனவு காண்கிறார்கள்.

டேனிஷ் ஆராய்ச்சியாளர்களின் ஒரு ஆய்வில், நீண்ட காலம் பார்வையற்ற ஒருவருக்கு படங்களாக கனவு தோன்றியதை கண்டறிந்தனர். ஆனால் பிறக்கும்போதே பார்வையை இழந்தவர்கள் படங்களாக கனவு காணமல் அவர்கள் கேட்ட ஒலிகளின் மூலம் கனவு காண்கிறார்கள்.

பதில் : பார்வையற்றவர்களும் கனவு காண்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button