உடல் நலம்

நமக்கு எவ்வளவு நேர உறக்கம் அவசியம்?

பொதுவாக இந்த கேள்விக்கு 8 மணிநேரம் என்று பதலளித்துவிடலாம். ஆனால் இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. பொதுவாக உடலுக்கு தேவையான தூக்கம் அவர்களின் வாழ்கை முறையை பொருத்து அமையும். அதாவது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நேரம் தேவைப்படும்.

எடுத்துகாட்டாக பிறந்த குழந்தைகளுக்கு 14 – 17 மணிநேரம் தூக்கம் அவசியம். டீனேஜர்களுக்கு எட்டு முதல் 10 மணி நேரம் தேவைப்படும். மேலும் பெரியவர்களுக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தேவைப்படும். இந்த நேரத்தைத்தான் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் (National Sleep Foundation ) பரிந்துறைக்கிறது.

தூங்கத்தை தவிர்ப்பதால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்பிருக்கிறது. முக்கியமாக முடி உதிர்வை சந்திக்க நேரிடும். எனவே கட்டாயம் போதுமான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். சில தவிர்க்கமுடியாத காரணத்தால் இரவு தூங்க முடியவில்லை என்றால் மறுநாள் கட்டாயம் நன்றாக தூங்குங்கள். அதுவே நன்மை பயக்கும்.

Related Articles

2 Comments

    1. நம் உடலுக்கு எவ்வளவு நேரம் உறக்கம் அவசியமோ அவ்வளவு நேரத்தை கொடுக்க வேண்டும். ஊ: தூக்கம் வரும்போது தூங்கிவிடவேண்டும், விழிப்பு ஏற்படும்போது எழுவது நல்லது. சராசரியாக 7 மணி நேரம் தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button