உடல் நலம்

தூக்கமின்மையால் ஏன் கண் கருவளையம் மற்றும் அதைப்பு ஏற்படுகிறது?

இன்றைய தலைமுறையினர்க்கு போதுமான தூக்கம் இல்லை காரணம் வேலைப்பளு மற்றும் நிம்மதியின்மை. ஆனால் இளம் வயதினர் கணினி மற்றும் கைபேசியில் தங்கள் தூக்கத்தை இழக்கிறார்கள். இப்படி நாம் சரியாக தூங்காமல் இருப்பதால் கண்ணை சுற்றியுள்ள ரத்தநாளங்கள் தளர்வடைகின்றன. இதனால் கண்ணை சுற்றியுள்ள மெல்லிய தோல்கள் கருமையாக மாறுகிறது. மேலும் கண்ணிற்கு கீழ் திரவத்தை வெளியேற்றுகிறது. இதனால் கண் அதைப்பு உருவாகிறது.

தோல் நோய் மருத்துவர் சூசன் வான் டைக், ஈராமான டீ பையினை கண்ணிற்கு அடியில் உள்ள அதைப்பின் மேல்வைத்தால் அதிலுள்ள டனிக் அமிலம் (tannic acid) அதிகப்படியான திரவத்தை உரிச்சுகிறது மேலும் ரத்தநாளங்களை சுருங்கச்செய்கிறது என்று கூறுகிறார்.

தூங்கமின்னையல் அழகு மட்டும் கெட்டுவிடாது ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும். மேலும் இதனால் ஒவ்வாமை மற்றும் கல்லீரல் கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம் உள்ளது. எனவே போதுமான உறக்கம் அவசியம்.

  • மேற்கண்ட பிரச்சனைகளுக்கு போதிய உறக்கம் கைகொடுகாவிட்டால் மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button