கார்பன் மோனாக்சைடு எந்த அளவிற்க்கு ஆபத்தானது தெரியுமா?
மிகவும் ஆபத்தான இந்த கார்பன் மோனாக்சைடு வாயு சாதாரணமாக சுற்றுசூழலில் கலந்துள்ளது. இந்த வாயுவிற்கு நிறமும் மனமும் கிடையாது என்பதால் நம்மால் உணர முடியாது.
இந்த வாயு அதிகமாக வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால் வெளியாகிறது. எனவே இதனை கட்டுபடுத்துவது கடினம். இந்த கொடிய வாயு நாம் சுவாசிக்கும்போது உடலில் கலந்து இரத்தத்தில் ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி கார்பாக்சிஹீமோகுளோபின் -ஐ (carboxyhaemoglobin) உற்பத்தி செய்கிறது.
இது ஹீமோகுளோபின் போலல்லாமல் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை சுமந்து செல்வதில் முற்றிலும் பயனற்றது. இது உடலில் கலப்பதால் தோல் மற்றும் உதடு அடர் சிவப்பு நிறமாக மாறும். இது நமது உடலில் கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதை உறுதிபடுத்துகிறது.
மேலும் இது தலைவலி மற்றும் பலவீனமான இதய துடிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வெளியில் செல்லும்போது வாகனப்புகை நம்மை தாக்காதவாறு முகத்தை துணியால் முடிகொள்ளுங்கள்.
- இந்த செய்தியை நண்பர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.